அமித் ஷாவுடன் சரத் பவார் சந்திப்பு

by Editor / 04-08-2021 10:25:04am
அமித் ஷாவுடன் சரத் பவார்  சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான எதிர்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் நோக்கில் மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதேசமயம் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவையும் சந்தித்து பேசுகிறார். கடந்த மாதம் பிரதமர் மோடியை சரத் பவார் சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை கிளப்பியது. ஆனால் மகாராஷ்டிரா மாநில பிரச்சினை தொடர்பாக மோடியை சரத் பவார் சந்தித்தார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சரத் பவார் சந்தித்து பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சர்க்கரை கூட்டுறவு மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்புகள் குறித்து அமித் ஷாவிடம் சரத் பவார் ஆலோசனை செய்ததாக தகவல். சரத் பவாருடன் சர்க்கரை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 2 பேரும் சரத் பவாருடன் சந்திப்புக்கு சென்று இருந்தார்கள் என்று தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Tags :

Share via