தமிழக வெற்றிக் கழகம் இன்று முக்கிய ஆலோசனை!

by Editor / 19-02-2024 09:25:05am
தமிழக வெற்றிக் கழகம் இன்று முக்கிய ஆலோசனை!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது. நடிகரும், தவெக தலைவருமான விஜய் அறிவுறுத்தலின் படி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், இந்தக் கூட்டம் நடக்கிறது. உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : தமிழக வெற்றிக் கழகம் இன்று முக்கிய ஆலோசனை!

Share via