57 பேருடன் தவிக்கும் பிரித்விராஜ் - ஊர் திரும்ப ஆசைப்படுகிறார் .

by Editor / 03-04-2020 01:06:18pm
57 பேருடன் தவிக்கும் பிரித்விராஜ் - ஊர் திரும்ப ஆசைப்படுகிறார் .

மலையாளத்தில் பிரபல நடிகரான பிரித்திவிராஜ் ’சமீபத்தில் ஆடுஜீவிதம் என்ற படத்திற்காக ஜோர்டான் சென்றார் படப்பிடிப்புக்காக 57 பேருடன் ஜோர்டான் சென்ற அவர் தற்போது நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார். 

“கொரோனாவால் கடந்த 27-ந்தேதி எங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பாலைவனக் கூடாரத்தில் தங்கும் நிலை ஏற்பட்டது. ஏப்ரல் 2-வது வாரம் வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டதால் அதற்கான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. குழுவில் உள்ள மருத்துவர் 72 மணிநேரத்துக்கு ஒருமுறை எங்களை பரிசோதனை செய்கிறார். ஊருக்கு திரும்ப ஆவலாக இருக்கிறோம். உலகம் தற்போது இருக்கும் சூழலில் எங்களை மீட்பது அதிகாரிகளின் கவலையாக இருக்காது என்பது புரிகிறது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர். வாய்ப்பு அமையும்போது ஊருக்கு வருவோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். வாழ்க்கை மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும் என்று நம்புவோம்”. இவ்வாறு கூறியுள்ளார்.

Share via