ஜெயலலிதா நகைகளை அரசிடம் ஒப்படைக்க தடை

by Staff / 07-03-2024 11:57:41am
ஜெயலலிதா நகைகளை அரசிடம் ஒப்படைக்க தடை

தமிழகத்தில் கடந்த 1991 முதல் 1996-ம் ஆண்டுவரை முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதுவருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்குதொடரப்பட்டது. இதில் அவருக்கு சொண்ட்யஹமான பல்வேறு நகைகள் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பொதுநல வழக்கு விசாரணையில் இந்த நகைகளை ஏலத்தில் விட்டு தமிழக அரசிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஜெ.தீபா தொடர்ந்த மனுவில் நான் ஜெயலலிதாவின் ரத்த வாரிசு, அதனால் எனக்குதான் அந்த நகைகள் சேர வேண்டும் என தொடர்ந்த வழக்கில், பெங்களூரு நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via