கிளர்ச்சிக் குழுக்கள் இடையே மோதல் - 40 பேர் பலி

by Staff / 07-03-2024 03:23:46pm
கிளர்ச்சிக் குழுக்கள் இடையே மோதல் - 40 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நைஜீரியாவின் பினு மாகாணம் உகம் பகுதியில் 2 கிளர்ச்சி குழுக்களுக்கு இடையே கடந்த 2 நாட்களாக பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த மோதல் சம்பவத்தையடுத்து உகம் பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via