திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

by Staff / 08-03-2024 01:59:28pm
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் தனித் தொகுதிகளில் விசிக இந்த முறையும் போட்டியிடுகிறது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டனர். சொந்த சின்னமான பானை சின்னத்தில் விசிக போட்டியிடும் என திருமாவளவன் தெரிவித்தார்.

 

Tags :

Share via