சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி போதைப்பொருள் பறிமுதல்

by Staff / 11-03-2024 02:43:55pm
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி போதைப்பொருள் பறிமுதல்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாடுகள் மற்றும் குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் போதைப் பொருள் கடத்தி வரும் நபர்கள் மற்றும் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவுப்படி போதைப் பொருட்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் வழியாக திருச்சிக்கு பல கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருள் கடத்தி வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அஸ்ரா கார்க் சில ஆண்டுகள் சிபிஐயில் பணியாற்றியதால் வெளிநாடுகளில் உள்ள தொடர்புகள் மூலம் இந்த தகவல் அவருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் தலைமையிலான தனிப்படையினர் தாய்லாந்து நாட்டில் இருந்து போதைப்பொருட்களை திருச்சி விமானம் நிலையம் வழியாக சென்னைக்கு கடத்தி வந்த சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த யாசர் அராபத் (34), சென்னை ராயப்பேட்டை கரீம் சுபேதார் தெருவை சேர்ந்த முகமது ஜைனுல் ரியாஸ்(30), சென்னை மாங்காடு ரங்கநாதபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சண்முகராஜ்ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்பிலான போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags :

Share via