கட்சி மாறிய விஜயதாரணியை கைவிட்ட பா.ஜ.க

by Staff / 22-03-2024 03:39:26pm
கட்சி மாறிய விஜயதாரணியை கைவிட்ட பா.ஜ.க

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 3 முறை எ..எல்..ஏ வாகயிருந்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியின் மீதிருந்த அதிருப்தியில்  கட்சியில் இருந்து விலகி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தோடுத  பாஜகவில் இணைந்தார்.. காங்கிரஸில் இருந்து அவர் வெளியே வந்ததற்கு காரணம் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால்தான் என்று கூறப்பட்டது. இந்நிலையில். பா.ஜ.க.வில் இணைந்த அவருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக நந்தினி  அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via