பானைச் சின்னம் ஒதுக்கக் கோரி விசிக மனு

by Staff / 27-03-2024 01:21:54pm
பானைச் சின்னம் ஒதுக்கக் கோரி விசிக மனு

தமிழகதைச் சேர்ந்த கட்சிகளான நாம் தமிழர் கட்சி, மதிமுக ஆகியவற்றுக்கு தேர்தல் ஆணையம் அடுத்தடுத்து சின்னங்களை ஒதுக்கி வருகிறது. இந்நிலையில் சின்னம் தொடர்பான சிக்கலில் தவித்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தங்களுக்கு பானைச் சின்னம் ஒதுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. விசிக அளித்துள்ள இந்த இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று(மார்ச்27) பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. தேர்தல் தேதி நெருங்க உள்ளதால் விரைவில் விசிகாவுக்கும் சின்னம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via