யாராச்சும் கிளம்புனா ரத்தம் கக்கி சாவீங்க அமைச்சர் செல்லூர் ராஜு

by Staff / 27-03-2024 05:22:08pm
யாராச்சும் கிளம்புனா ரத்தம் கக்கி சாவீங்க அமைச்சர்  செல்லூர் ராஜு

மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு பேசினார். அப்போது தொண்டர்கள் சிலர் கூட்டத்தில் இருந்து எழுந்து சென்றுகொண்டிருந்தனர். மேடையில் இருந்து நிர்வாகிகள் அனைவரையும் அமருங்கள் என கூறினர். இதையடுத்து பேசிய செல்லூர் ராஜு, நான் பேச தொடங்கப்போகிறேன். பேசி முடிக்கும் வரை யாரும் எழுந்து போகக்கூடாது. அப்படி போனால் வீட்டிற்கு செல்வதற்குள் ரத்தம் கக்கி செத்துருவீங்க. அப்படி ஒரு மாத்திரம் போட்டு வச்சுருக்கேன் என கூறினார்.

 

Tags :

Share via