வீடியோ, ஆடியோ பற்றி தலைமை ஏன் வாய் திறக்க மறுக்கிறது: ஜோதிமணி

by Editor / 29-08-2021 07:14:21pm
வீடியோ, ஆடியோ பற்றி தலைமை ஏன் வாய் திறக்க மறுக்கிறது: ஜோதிமணி

பாஜக கட்சியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கேடி ராகவனுக்கு எதிராக பாலியல் ரீதியான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மதன் ரவிசந்திரன் என்ற முன்னாள் பாஜக நிர்வாகி இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து மதன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இதை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக இன்னொரு ஆடியோவை மதன் வெளியிட்டு இருந்தார். கேடி ராகவன் வீடியோ குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் தான் முன்பே பேசியதாக கூறி மதன் ஆடியோ ரெக்கார்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால் இதில் மதனிடம் பேசுவது அண்ணாமலைதானா என்பது உறுதி செய்யப்படவில்லை.இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து முன்பு கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி, பாஜகவின் தற்போதைய மாநில தலைவர் தங்கள் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதை தட்டிக் கேட்க அவருக்கு தைரியமில்லை குற்றவாளியை விட்டுவிட்டு குற்றத்தை வெளிக்கொண்டுவந்தவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார். தமிழக பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும், என்று ஜோதிமணி குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பாஜக அலுவலகமான கமலாலயம் முன்பு ஜோதிமணி போராட்டம் நடத்தினார். பாஜகவில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கூறி கமலாலயம் முன்பு ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர்கள் போராட்டம் செய்தனர். ஜோதிமணி எம்பி, வழக்கறிஞர் சுதா உள்பட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த போராட்டத்தின் பொது அப்புறப்படுத்தப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து ஜோதிமணி மீண்டும் ட்வீட் செய்துள்ளார். அண்ணாமலை பேசியதாக வைரலாகி வந்த ஆடியோவை வெளியிட்டு ஜோதிமணி ட்வீட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

Tags :

Share via