ஆ.ராசா, டிடிவி தினகரன் வேட்பு மனுக்கள் நிறுத்தி வைப்பு

by Staff / 28-03-2024 01:00:54pm
ஆ.ராசா, டிடிவி தினகரன் வேட்பு மனுக்கள் நிறுத்தி வைப்பு

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவில் சில பிழைகள் இருப்பதாக கூறி ஆ.ராசாவின் வேட்பு மனுவை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். அதே போல் தேனி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனுவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய சட்ட விதிகளை மீறி, தேர்தல் பிரச்சார வாகனத்தில் டிடிவி தினகரன் வந்ததை சுட்டிக்காட்டி, திமுக, அதிமுக, நாதக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவரது வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது.

 

Tags :

Share via