மோடி தமிழகத்தில் வால் ஆட்ட முடியாது - ஆர்.எஸ்.பாரதி

by Staff / 06-04-2024 12:08:59pm
மோடி தமிழகத்தில் வால் ஆட்ட முடியாது - ஆர்.எஸ்.பாரதி

ஸ்ரீபெரும்புதூர் எம்பி வேட்பாளர் டிஆர்பாலுவை நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், எங்கே மோடி வாலாட்டினாலும் இங்கு ஆட்ட முடியாது, தமிழகத்தில் கால் செருப்பை கூட அவரால் தொட்டு பார்க்க முடியாது. பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் மக்கள் பயனடைந்துள்ளதால் வாக்களிக்க தயாராக உள்ளனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் பிரதமர் மோடி ஏற்கெனவே நான்கு முறை வந்துவிட்டார். இன்னும் 4 முறை வர உள்ளார். எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பருப்பு வேகாது என்று பேசியுள்ளார்.

 

Tags :

Share via