இன்று முதல்ஆலயங்களில் அன்னை தமிழில் அர்ச்சனை

by Editor / 06-08-2021 09:00:14am
இன்று முதல்ஆலயங்களில் அன்னை தமிழில் அர்ச்சனை

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 ஆலயங்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் தமிழ் மந்திரங்கள் தமிழக கோவில்களில் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. கோவிலுக்கு செல்வோர் தமிழில் அர்ச்சனை செய்து இறைவனிடம் வேண்டிக்கொள்ளலாம். இறைவனுக்கு தமிழில் அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் மக்களுக்கு அந்த மந்திரங்களின் அர்த்தம் புரியும். அந்த மந்திரங்களின் சக்தியும் மக்களுத் தெரியும்.

அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைத்தார். தமிழ் மொழியில் நடத்தப்பட்ட வழிபாட்டையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை செய்ய உள்ள குருக்களின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் பதாகைகளில் வைக்கப்பட்டுள்ளன.தமிழில் அர்ச்சனைசெய்ய விரும்பும் பக்தர்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அர்ச்சனை செய்து கொள்ளலாம் என்று கூறினார். இதனைத்தொடர்ந்து, முதல்கட்டமாக வடபழனி முருகன் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 47 பெரியகோயில்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள539 முக்கிய கோயில்களில் 'அன்னை தமிழில் அர்ச்சனை'செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக கூறினார்.

இதற்காக, முருகன், விநாயகர், பெருமாள், சிவன், அம்மன் எனதனித்தனி கடவுள்களுக்கு ஏற்றவகையில் போற்றிப் புத்தகங்கள் தனித்தனியாக 14 வகைகளில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளதாகவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

 

Tags :

Share via