துருக்கிக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

by Staff / 09-04-2024 04:52:59pm
துருக்கிக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

பொருளாதார கட்டுப்பாடுகளை விதித்த துருக்கிக்கு எதிராக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கவுடன் இணைந்து துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேல் வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காசாவில் போர் நிறுத்தம் செய்யாத இஸ்ரேலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அலுமினியம், எஃகு, இரசாயனங்கள், உள்ளிட்ட 54 பொருள்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்ய துருக்கி தடை விதித்த நிலையில், இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via