மீன் பிடி தடைக்காலம்:  விழுப்புரம் மாவட்ட 19 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

by Editor / 15-04-2024 09:11:34am
மீன் பிடி தடைக்காலம்:  விழுப்புரம் மாவட்ட 19 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மன்னார் வளைகுடா கடலில் தற்போது மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்தால், மீன் வளம்குறைந்து விடும். இதனை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது.இந்த நிலையில் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள வசவன்குப்பம், கைப்பாணி குப்பம், எக்கியார்குப்பம், அனுமந்தை குப்பம் உள்ளிட்ட 19 மீனவ கிராமம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை மேலும்
மீன்பிடித் தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல், துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்படும். அதேநேரத்தில், மீன்பிடித் தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களது மீன் வலைகள், விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவர்.  நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோரப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்வர்.

 

Tags : மீன் பிடி தடைக்காலம்:  விழுப்புரம் மாவட்ட 19 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Share via