குற்றாலம் பகுதிகளிலுள்ள  பல்வேறு விடுதிகளில் வெளியூர் நபர்கள் தங்கி உள்ளனரா-காவல்துறை ஆய்வு.

by Editor / 17-04-2024 11:21:54pm
 குற்றாலம் பகுதிகளிலுள்ள  பல்வேறு விடுதிகளில் வெளியூர் நபர்கள் தங்கி உள்ளனரா-காவல்துறை ஆய்வு.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 முடிவுடன் நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்களது தீவிர பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளனர்.

இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி வெளியூர்களிலிருந்து இருந்து வரவழைக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள், ஊர்வலம் மற்றும் பிரச்சாரத்திற்காக வரப்பட்ட கட்சி தொண்டர்கள், உள்ளிட்டோர் கல்யாண மண்டபம், விடுதிகள் (Lodges) போன்றவற்றில் தங்கியுள்ள வெளியூர் நபர்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 
தென்காசி நகர் பகுதி மற்றும் குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் காவல் துணை கண்காணிப்பாளர் நாக சங்கர்  தலைமையிலான காவல்துறையினர்  விடுதிகளில் வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என்பது குறித்து 
இரவு நேரத்தில் திடீர் சோதனையை மேற்கொண்டார். சில விடுதிகளில் வெளியூர் நபர்கள் தங்கியிருந்ததை கண்டறிந்து அவர்களை சொந்தஊருக்கு புறப்பாட்டு செல்ல அவர் அறிவுரை வழங்கினார்.வைரஸ் நகரிலுள்ள ஒரு காட்டேஜில் சீட்டுவிளையாட்டு நடந்துவருவதாக கிடைத்ததகவலைத்தொடர்ந்து அங்கும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் சீட்டுக்கட்டுக்கள்மற்றும்  மதுப்பாட்டில்கள்,ஆகியவற்றை கைப்பற்றினர்.வெளியூர் நபர்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை காவல்துறையினர் எச்சரிக்கை செய்து முகவரி அடையாள சான்றுநகல்களை வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தனர் .மேலும் வெளியூர் நபர்களை தேர்தல் நடத்தை விதிமுறைப்படி தொகுதியை விட்டு வெளியூருமாறும் அறிவுறுத்தினார்.

 

Tags :  குற்றாலம் பகுதிகளிலுள்ள  பல்வேறு விடுதிகளில் வெளியூர் நபர்கள் தங்கி உள்ளனரா-காவல்துறை ஆய்வு.

Share via