தோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கம்

by Editor / 06-08-2021 05:43:11pm
 தோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கம்

ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு ப்ளூ டிக் வழங்கப்படும். அதுபோல தோனியின் ட்விட்டர் கணக்குக்கும் ப்ளூ டிக் வழங்கப்பட்டிருந்தது. தோனி  கடைசியாக ஜனவரி 8 அன்று தனது ட்விட்டர் கணக்கில்  ட்வீட் வெளியிட்டுள்ளார். அதற்குப் பிறகு ஒரு ட்வீட்டும் வெளியிடாததால் இந்தக் காரணத்துக்காக ப்ளூ டிக்கை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியிருக்க வாய்ப்புள்ளது. தோனியின் கடைசி இரு ட்வீட்கள் 2021 ஜனவரி 8, 2020 செப்டம்பர் 10 ஆகிய தேதிகளில் வெளிவந்துள்ளன.


இந்நிலையில் தோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியான ரசிகர்கள் பலரும் ட்விட்டரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்கள். 


ப்ளூ டிக் வழங்குவது பற்றி ட்விட்டரின் விளக்கம்: அதிகாரபூர்வமான கணக்கு என்பதை மக்கள் அறிந்து கொள்வதற்காக ப்ளூ டிக் வழங்கப்படுகிறது. ப்ளூ டிக் கிடைப்பதற்கு உங்களுடைய கணக்கு தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துருக்கிறது
 

 

Tags :

Share via