மதுரை சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் :

by Editor / 22-04-2024 09:09:40am
மதுரை சித்திரை திருவிழா  திருத்தேரோட்டம் :

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் : தேரில் பவனி வந்த அன்னை மீனாட்சி- சுந்தரேஸ்வரர்.ஆயிரக்கணக்கான மக்கள் வடம்பிடித்து தேரை இழுத்துவர அசைந்தாடி வந்த தேர் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடியபடியும், ஹர ஹர சிவா என்ற பக்தி கோஷங்களை எழுப்பிய பக்தர்கள்சைவத்தையும் -வைணவத்தையும் இணைக்கும் விழாவாகவும், மக்களின் ஒற்றுமையையும் , மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் திருவிழாவாகவும் கொண்டாடப்படும் மதுரை சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைப்பெற்று வருகிறது.

மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் 12ம் தேதி காலை மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.கொடி யேற்றத்துடன் துவங்கியதில் இருந்து  12 நாட்களும் சுவாமியும் - அம்பாளும் காலை- மாலை என இருவேளையும் பல்வேறு வாகனங்களில்  வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19ம் தேதி பட்டாபிஷேகம் நடைப்பெற்றது‌. மதுரையின் பட்டத்தரசியாக முடிசூட்டிக்கொண்ட உடன் மதுரையிலிருந்து படையுடன் கிளம்பி, ஒவ்வொரு திக்கிற்கும் சென்று மீனாட்சியம்மன் போர் தொடுக்கிறார் என்பதை குறிப்பிடும் நிகழ்வாக 20ம் தேதி திக் விஜயம் நடைபெற்றது.மதுரையின் எல்லையை விரிவுப்படுத்தி அரசாட்சி புரியும் நோக்கில் அஷ்டதிக் பாலகர்களுடன் மீனாட்சியம்மன் போரிடுவதை திக் விஜயம் குறிக்கிறது.இந்திரன்,வாயு,நெருப்பு, வருணன், எமன், குபேரனுடன் மீனாட்சியம்மன் போரிட்டு வெல்கிறார்.

இந்திர விமானத்தில் ஊர்வலம் வரும் மீனாட்சி அம்மன் அஷ்ட திக்பாலர்களுடன் முதலில் வில் போர் நடத்தி வெற்றிக்கண்டு, இறுதியில் சொக்கநாதரை எதிர்கொண்டு போரிட முடியாமல் நிற்கிறார்.

இதனைத்தொடர்ந்து 21ம் தேதி மீனாட்சி -சுந்தரேஸ்வரர்  திருக்கல்யாண வைபவம் நடைப்பெற்றது‌.தொடர்ந்து இரவு யானை ஆனந்த ராயர் பூப் பல்லக்கில் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளினர். சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் நடைப்பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துவர, திருத்தேரானது ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

திருத்தேரோட்டத்தை முன்னிட்டு   கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சிஅம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடை  சமேதராக கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது.. 

இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரியதேரில் சுந்தரேஸ்வர் பிரியாவிடை சமேதராகவும்,  சிறப்பு அலங்காரத்திலும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர்


திருத்தேரானது நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து, பிற்பகலில் நிலைக்கு வந்து சேரும்.மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும், பெரிய தேரில் சுந்தரேஸ்வரர் - பிரியாவிடை அம்மனும் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுந்தனர். 

கீழ மாசி வீதியில் துவங்கும் தேரோட்ட நிகழ்வானது தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதி வழியாக வலம் வந்து மீண்டும் கீழ மாசி வீதியை வந்தடையும்.விண்ணைப்பிளக்கும் வகையில் ஹர ஹர சிவா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி  தேரை வடம் பிடித்து இழுத்துசெல்லும் பக்தர்கள் 

தேரோட்டம் தொடங்கும் முன் அங்குள்ள கருப்பணசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து பெரிய தேர் புறப்படாகி அதை தொடர்ந்து  சிறிய தேரும் புறப்படாகியது.சுவாமி அம்மன் திருத்தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்லும்போது அவற்றை தொடர்ந்து  முதலில் விநாயகரும் இரண்டாவதாக முருகப்பெருமானும், தொடர்ந்து நாயன்மார்களும் அமர்ந்திருந்த சப்பரங்கள் செல்கின்றது.

சுவாமி, அம்மனின் திருத்தேரானது மதுரை நகர வீதிகளான கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வரவுள்ளது மதியம் 12 மணிக்குள்  கீழமாசி வீதியில் உள்ள தேரடியை வந்து அடையவுள்ளது.மாசி வீதிகளிள் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக ஏராளமான சிவ பக்தர்கள் சங்கு முழங்கியபடியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடியபடியும், ஹர ஹர சிவா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துசென்று வணங்கிவருகின்றனர்.தேரோட்டத்தை காண மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்  மதுரை மாநகர  காவல்துறை சார்பில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கவால்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags : மதுரை சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் :

Share via