டிக்டாக் செயலிக்கு தடை? அமெரிக்கா விடுத்த கெடு

by Staff / 24-04-2024 01:09:46pm
டிக்டாக் செயலிக்கு தடை? அமெரிக்கா விடுத்த கெடு

அமெரிக்கர்களின் தரவுகளை சீனா திருடுவதாக குடியரசு கட்சி தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அந்த நாட்டின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றி உள்ளது. டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ்(ByteDance) நிறுவனம் 9 மாதங்களுக்குள் டிக்டாக்கின் பங்குகளை விற்காவிட்டால், இந்த செயலியை அமெரிக்க ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்க இந்த சட்டம் வழிவகை செய்துள்ளது.

 

Tags :

Share via