பிரசாந்த் படத்தில் வனிதா விஜயகுமார் 

by Editor / 09-08-2021 05:17:54pm
பிரசாந்த் படத்தில் வனிதா விஜயகுமார் 

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் வனிதா விஜயகுமார் வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். 


இந்நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் நடனத்தைப் பற்றி ரம்யா கிருஷ்ணன் விமர்சனம் செய்ததாக கூறி பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து வனிதா விஜயகுமார் ஒருத்தரை மற்றொருவருடன் ஒப்பிடுவது தவறு எனக் கூறி வெளிப்படையாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.


தற்போது வனிதா விஜயகுமார் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இப்போது படத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளனர். வனிதா விஜயகுமார் மற்றும் தியாகராஜன் இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியிட்டு தற்போது வனிதா விஜயகுமாரின் டப்பிங் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதில் குறிப்பிட்டுள்ளனர்.

 

Tags :

Share via