உடுமலை-பொள்ளாச்சி எல்லையில் கடத்தல் சம்பவங்கள் அதிகரிப்பு

by Admin / 12-08-2021 01:53:24pm
உடுமலை-பொள்ளாச்சி எல்லையில் கடத்தல் சம்பவங்கள் அதிகரிப்பு

கனிம வளம் கொள்ளை போவதை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

-உடுமலையை அடுத்த தேவனூர் புதூர் பகுதி திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியின் மாவட்ட எல்லையாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு அருகாமையில் அமைந் திருக்கும் இப்பகுதியில் ஏராளமான அரியவகை மரங்களும், வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும்.
 
மேலும் பாலாற்றங் கரையில் கொட்டிக்கிடக்கும் மணலுக்கு நல்ல விலை கிடைப்பதால் மாவட்ட எல்லையை கடந்து பல பகுதிகளுக்கு மணல் கடத்தலில் சில சமூக விரோதிகள் ஈடுபட்டு வந்தனர். போலி மதுபானங்கள், போதை வஸ்துக்கள் போன்றவற்றையும் இவ்வழியாக மாவட்டம் விட்டு மாவட்டம் கடத்தப்பட்டது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாவட்ட எல்லையான தேவனூர் புதூர் பகுதியில் புதிய சோதனை சாவடி திறக்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.எஸ்.பி அதனை திறந்து வைத்தார்.ஆனால் இந்த சோதனை சாவடி இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் கிடக்கிறது.
 
இதனால் சில சமூக விரோத செயல்கள் தொடர்கிறது உடனடியாக சோதனை சாவடியில் போதுமான அளவில் போலீசாரை பணியமர்த்தி 24 மணி நேரமும் கண்காணிக்கும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வளம் கொள்ளை போவதை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via