ரேஷன் கடைகளில் பயிறு, பனங்கருப்பட்டி வேளாண் நிதிநிலை அறிக்கையில் தகவல்

by Editor / 14-08-2021 04:03:36pm
ரேஷன் கடைகளில் பயிறு, பனங்கருப்பட்டி  வேளாண் நிதிநிலை அறிக்கையில் தகவல்

தமிழகத்தில் முதன்முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி வேளாண் பட்ஜெட் 2021, தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக உறுதியோடு போராடி வரும் விவசாயிகளுக்கு காணிக்கை என சொல்லி அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை தொடங்கினார். அந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் -

தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதமாக உயர்த்துவதற்காக தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது.விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக்குழு தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்படும்வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மை என்று தனிப்பிரிவு உருவாக்கப்படும். இயற்கை வேளாண்மை விவாசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்பட்டு ஊக்கவிக்கப்படும். "இயற்கை விவசாயி நம்மாழ்வார் பெயரில் ரூ.3 கோடியில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்!. நெல் ஜெயராமன் சேகரித்த மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.புதிய விவசாய தொழில் நுட்பங்களையும் இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்கலைஞர் கொண்டு வந்த உழவர் சந்தை திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதன்படி 10 மாவட்டங்களில் ரூ.6 கோடி செலவில் 10 புதிய சந்தைகள் அமைக்கப்படும். உழவர் சந்தைகளை நவீனப்படுத்தி மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஹெக்டேருக்கு ரூ.15,000 வழங்கப்படும். காடு மற்றும் மலைப்பிரதேசங்களில் 70 சதவித மானியத்தில் 5,000 சூரிய சக்தி பம்பு செட்டுகள் நிறுவப்படும்.பனைமர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் ரூ.3கோடி செலவில் பனை மேம்பாடு இயக்கம் உருவாக்கப்படும். 76 லட்சம் பனை விதைகள் ஒரு லட்சம் பனைமர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயமாக்கப்படுகிறது. பனைவெல்ல பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யப்படும். கலப்படம் இல்லா பதநீரை மக்களிடம் கொண்டு சேர்த்தால் நல்ல வரவேற்பபு கிடைக்கும்.பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. துவரை, உளுந்து, பச்சைப்பயிறு போன்ற பயிறு வகைகளை 61,000 டன் அளவுக்கு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது.

இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்க இந்த அரசு கவனம் செலுத்தும். வேளாண் மாணவர்களுக்கு இதற்காக பட்டப்படிப்பின் போதே பயிற்சிகள் வழங்கப்படும்சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும். தஞ்சையில் தென்னை மதிப்புக் கூட்டு மையம் அமைக்கப்படும்.

50 லட்சம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்படும்.நெல்லுக்கான ஆதரவு விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.100 ஆக உயர்த்தப்படும். கரும்பக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ.2900 ஆக உயர்த்தப்படுகிறது. அத்துடன் கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

 

Tags :

Share via