டிஜிபி ராஜேஸ் தாஸ் பாலியல் வழக்கு:  வேறு மாநிலத்துக்கு மாற்றக்  கூடாது   உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

by Editor / 18-08-2021 04:21:13pm
டிஜிபி ராஜேஸ் தாஸ் பாலியல் வழக்கு:  வேறு மாநிலத்துக்கு மாற்றக்  கூடாது   உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

 


சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக ஆட்சியில் இருந்த போது, பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்தது. அவர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னால் எஸ்.பி மீதும் 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் 400 பக்க அளவிலான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.


இதனிடையே, இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் சிறப்பு டிஜிபி மேல்முறையீடு செய்திருந்தார். காழ்புணர்ச்சியால் போலீஸ் அதிகாரிகள் தனக்கு எதிராகச் செயல்படுவதால் நியாயம் கிடைக்காது. தன் மீதான பாலியல் புகாரை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். தமிழகத்தில் விசாரணை நடத்த வேண்டாம் என்று கோரியிருந்தார்.


சிறப்பு டிஜிபியின் முறையீட்டை  விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற மறுத்துவிட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்டு சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கு விசாரணையை சென்னை ஐகோர்ட் கண்காணிக்கவும் தடை விதித்தது.

 

Tags :

Share via