சிறுமி பலாத்காரம்- முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 25 ஆண்டு ஜெயில் தண்டனை

by Admin / 25-08-2021 01:25:41pm
சிறுமி பலாத்காரம்- முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 25 ஆண்டு ஜெயில் தண்டனை

கடந்த 2007-ம் ஆண்டு சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 25 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

மேகாலயா மாநிலத்தில் தேசிய பழங்குடியினர் விடுதலை கவுன்சில் என்ற அரசியல் அமைப்பை நடத்தி வருபவர் ஜூலியஸ் டார்பாங். இவர் மீது 2007-ம் ஆண்டு சிறுமி ஒருவர் கற்பழிப்பு புகார் கொடுத்தார்.

 இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஜூலியஸ் டார்பாங்கை கைது செய்தனர். இந்த வழக்கு மேகாலயா கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது.

இதை விசாரித்த சிறப்பு கோர்ட்டு நீதிபதி எப்.எஸ்.சங்மா, குற்றவாளி ஜூலியஸ் டார்பாங்குக்கு 25 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

இவர் மீது கற்பழிப்பு புகார் கூறப்பட்ட பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் ஜூலியஸ் டார்பாங் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via