பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

by Admin / 14-02-2022 11:02:11am
 பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்   வெற்றிகரமாக  விண்ணில் ஏவப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து இன்று அதிகாலை பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 3 செயற்கைக்கோள்களுடன் இந்த ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இந்த பி.எஸ்.எல்.வி. சி52 ராக்கெட் மூலம்  ஈஓஎஸ்-04 என்ற செயற்கைக்கோளும், இன்ஸ்பயர் சாட்-1 மற்றும் ஐ.என்.எஸ்-2டிடி என்ற 2 சிறிய வகையிலான செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டன.

விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் பூவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
 
இந்த செய்ற்கைக்கோள்களில் பூமியில் விவசாயம், வனம், வெள்ளம் போன்றவற்றை துல்லியமாக படம்பிடிக்கும் அதிநவீன கேமரா உள்ளது. 

இஸ்ரோ தலைவராக புதிதாக பதவியேற்றுள்ள சோம்நாத் தலைமையில் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.எல்.வி. சி52 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via