மருத்துவமனைகளில் அரசு விதியை மீறி அதிக கட்டணம் வசூலா? நடவடிக்கை பாயும்…

by Admin / 27-08-2021 01:28:51pm
மருத்துவமனைகளில் அரசு விதியை மீறி அதிக கட்டணம் வசூலா? நடவடிக்கை பாயும்…

கொரோனா காலத்தில் அரசு விதியை மீறி, அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை மீது, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

 கொரோனா காலத்தில் அரசு விதியை மீறி, அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை மீது, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாறில் உள்ள ஸ்மார்ட் விஷன் அண்ட் டயாபட்டிக் கிளினிக் மருத்துவமனையில், கோபிநாத் என்பவர் கொரோனா சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். அவரிடம் 8 லட்சத்து 5 ஆயிரத்து 787 ரூபாய் கட்டணமாக வசூலித்துள்ளனர்.

இந்த நிலையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த கட்டணத்தை, 7 நாட்களுக்குள் மருத்துவமனை நிர்வாகம் திருப்பி அளிக்க வேண்டும் எனவும், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கவும், சென்னை மாவட்ட மருத்துவம் மற்றும் கிராமப்புற மருத்துவமனைகள் இயக்குனருக்கு, சென்னை மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது.

Tags :

Share via