இளைஞர் மீது ஆசிட் வீசி கொடூரத் தாக்குதல்... காவல் நிலையம் முற்றுகையால் பரபரப்பு...

by Admin / 30-08-2021 01:11:56pm
இளைஞர் மீது ஆசிட் வீசி கொடூரத் தாக்குதல்... காவல் நிலையம் முற்றுகையால் பரபரப்பு...



நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் காவல் நிலையம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஆயிஷா பீ நகர் பகுதியை சேர்ந்தவர் ஷமீல் அஹமத் (26) இவர் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியில் உள்ள  தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த  23ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த  நிலையில் ஷமீல் அஹமத் கடந்த 17 ந்தேதி  இரவு  தொழிற்சாலையில் பணி முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென ஷமில் அகமது முகத்தில் ஆசிட் வீ்சி விட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

வலி தாங்க முடியாமல் நிலை தடுமாறி மயங்கி விழுந்த ஷமீல் அகமதுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆம்பூர் நகர  போலீசார் இளைஞர் மீது முகத்தில் ஆசிட் வீசி விட்டுச் சென்ற மர்ம நபர்களை காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஷமில் அகமதுவின் சித்தப்பா மகன்களான தப்ரேஸ், நபில் மற்றும் அவரது மாமா முபாரக் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஷமில் அகமது மற்றும் அவரது உறவினர்கள்  உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல் உறவினர்கள் மத்தியில் பிரச்சனையை தூண்டும் வகையில் நகர காவல் ஆய்வாளர் திருமால் மற்றும் காவல்துறையினர் செயல்படுவதாகக் கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவலறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via