இன்று இந்தியா -இங்கிலாந்து இடையே 4-வது டெஸ்ட்

by Editor / 02-09-2021 09:43:28am
இன்று இந்தியா -இங்கிலாந்து இடையே 4-வது டெஸ்ட்

இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நடைபெற்ற நிலையில், முதல் போட்டி டிராவில் முடிந்ததால் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளனர்.

இந்நிலையில், இன்று 4-வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இன்று 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கடந்த போட்டியில் இந்திய அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுத்தோல்வியை சந்தித்தது. இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கவாய்ப்புள்ளது என கூறப்படுகிறது

 

Tags :

Share via