உள்ளாட்சித் தேர்தல்: மாவட்டத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக

by Editor / 04-09-2021 10:23:24pm
உள்ளாட்சித் தேர்தல்: மாவட்டத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக. இதற்கான உத்தரவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், சிற்றூராட்சித் தலைவர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, மாவட்டத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, தலைமைக் கழக நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள்; சட்டமன்ற உறுப்பினர்கள்; முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள்; ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிக் கழக நிர்வாகிகள்; கிளை, நகர, பேரூராட்சி வார்டு, மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகள் அனைவரும் சிறப்பான முறையில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும், முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via