சோமாவதி அமாவாசையில் அன்னதானம்

by Editor / 06-09-2021 10:13:05am
சோமாவதி அமாவாசையில் அன்னதானம்

சோமாவதி அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுகிறது. திங்கட்கிழமை வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது. சோம என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று பெயர். அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது.

சோமவதி அஸ்வத்த விருக்ஷம் என்னும் அரசமரத்தை பக்தியுடன் 108 அல்லது 56 அதுவும் இல்லையென்றால் குறைந்த பட்சம் 7 முறையாவது சுற்றி வருவது மிகுந்த புண்ணியகரமானதாகும். இதன் மூலம் பிரம்ம-விஷ்ணு-சிவன் என்னும் மூவரின் அருளால் நாம் அறியாமல் செய்த பாவம் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

இன்றைய தினம் சர்வ அமாவாசையாகும். இந்த நாளில் காலையில் குளித்து முடித்து வேப்பமரத்துடன் இருக்கும் அரசமரத்தை சுற்றி வருவது மிகுந்த நன்மைகளை தரும்.

அமாவாசையில் முன்னோர்களின் ஆசி

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணிய லோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோவதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.

அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும். அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.

இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.

முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாளான அமாவாசை அனைவருக்கும் ஏற்றநாள். அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.

சாதாரணமாக இறந்த ஆத்மாக்கள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும். அப்பொழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆத்மாக்கள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.

சாதாரணமாக இறந்த ஆத்மாக்கள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும். அப்பொழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் தானமாக அளிக்கலாம்.

ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.

நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! முன்னோர்களை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட முன்னோர்களின் சோப்பிக்கிறாள்.

அன்னதானம் செய்யும் போது எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அமாவாசை நாளில் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஆனால் வட இந்தியாவில் நிறைந்த அமாவாசையில் நிறைய நல்ல காரியங்கள் செய்வார்கள்.

அமாவாசை நாளில் முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே. அமாவாசை நாளில் நம்முடைய முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் நல்லதே நடக்கும்.

முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய அமாவாசை அன்று அன்னதானம் தர இயலாதவர்கள் பசு மாட்டிற்கு வாழைப்பழங்கள் அல்லது அகத்திக்கீரை கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

நம்முடைய தோஷங்கள் நீங்கி முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். அவரவர் வசதியைப் பொறுத்து வேறு தானங்கள் கொடுக்கலாம்.

இன்றைய தினம் சோமாவதி அமாவாசை என்பதால் அஸ்வத்த விருக்ஷம் என்னும் அரசமரத்தை பக்தியுடன் 108 அல்லது 56 அதுவும் இல்லையென்றால் குறைந்த பட்சம் 7 முறையாவது சுற்றி வருவது மிகுந்த புண்ணியகரமானதாகும். இதன் மூலம் பிரம்ம-விஷ்ணு-சிவன் என்னும் மூவரின் அருளால் நாம் அறியாமல் செய்த பாவம் நீங்கி நன்மைகள் உண்டாகும். ஆகவே இந்த புண்ணிய தினத்தில் வேப்பமரத்துடன் இருக்கும் அரசமரத்தை சுற்றி வருவது மிகுந்த நன்மைகளை தரும்.

மரங்களை சுற்றும்போது சில மந்திரங்களை கூற புண்ணியம் அதிகரிக்கும்.

" மூலதோ ப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத: சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நம:

அக்ஷி ஸ்பந்தம் புஜ ஸ்பந்தம் து:ஸ்வப்னம் துர் விசிந்தனம் சத்ரூணாம் ச ஸமுத்பன்னம் அச்வத்த சமயஸ்வ மே"

என்ற மந்திரத்தை கூறிக்கொண்டு சுற்றினால் நல்லது நடைபெறும். 

 

Tags :

Share via