பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய்டிவி பிரியங்கா?

by Editor / 07-09-2021 04:02:12pm
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய்டிவி பிரியங்கா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஒளிபரப்ப இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

இந்த நிலையில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது அப்டேட் தெரிவித்துவரும் டுவிட்டர் பயனாளி ஒருவர் இதனை உறுதி செய்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் பிரியங்கா விஜய் டிவியில் உள்ள பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் பிஸியான அவரை எப்படி பிக்பாஸ் வீட்டிற்குள் விஜய் டிவி அனுப்புவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் மிளா, சந்தோஷ் பிரதாப், பவானி ரெட்டி, கோபிநாத் ரவி, சூசன் ஜார்ஜ் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி பி முத்து பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியானாலும் அந்த செய்தியில் உண்மை இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற கனி மற்றும் சுனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் செல்ல உள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நிலையில் இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும் அதில் நான் கலந்துகொள்ள இருப்பதாக எனது பெயர் அடிபடுகிறது. ஆனால் நான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை. எனவே செய்தி போடுபவர்கள் என்னை அந்த பட்டியலில் இருந்து நீக்கி விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via