முகக்கவசம் அணியாத 4,362 பேரிடம் ரூ.8.72 லட்சம் அபராதம் வசூல்

by Editor / 19-09-2021 06:00:27pm
முகக்கவசம் அணியாத 4,362 பேரிடம் ரூ.8.72 லட்சம் அபராதம் வசூல்

சென்னை மாநகர காவல்துறை எல்லை பகுதியில் கடந்த 3 நாட்கள் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் முகக்கவசம் அணியாத 4,362 பேரிடம் 8 லட்சத்து 72 ஆயிரத்து 400 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில் கொரோனா பரவல் தற்போது முன்பை விட அதிகரித்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் காவல்துறையினர் மாநகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 16 ந் தேதி முதல் 18 ந் தேதி வரை 3 நாட்களில் சென்னை காவல்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி குழுவினர் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட தீவிர தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் மீது 4,362 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் ரூ.8,72,400- வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து, கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், கொரோனா தொற்று 3வது அலை ஏற்படாத வண்ணம் ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் சென்னை மாநகர காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்

 

Tags :

Share via