பெங்களூருவில் குண்டு வெடித்து 3 பேர் பலி

by Editor / 23-09-2021 03:02:17pm
பெங்களூருவில் குண்டு வெடித்து 3 பேர் பலி

பெங்களூருவில் இன்று மதியம் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு, பெங்களூருவில் உள்ள போக்குவரத்துத் துறையின் கிடங்குக்கு பக்கத்தில் இருந்த வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைக்கு அருகே நிகழ்ந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் இருந்த இரண்டு பேர் உள்பட மூவர் பலியாகினர். 4 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பில் பலியானோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சில ரசாயனக் கலவைகளால் இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் வெடித்த பொருள் பற்றி இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via