கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்  ஊசி செலுத்திய  அதிகாரிகள் சஸ்பெண்ட்

by Editor / 29-09-2021 06:19:49pm
கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்  ஊசி செலுத்திய  அதிகாரிகள் சஸ்பெண்ட்

 

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன என்பதும், தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தடுப்பூசியை சுகாதாரத்துறை அதிகாரிகள் செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் இந்தியா முழுவதும் 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள்களூக்கு தடுப்பு ஊசி செலுத்தி விட்டதாக மத்திய அரசு சாதனையாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்த வரும் ஒரு சிலருக்கு சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. குறிப்பாக முதல் தடுப்பூசி போடுவதற்கு பதிலாக இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது உள்பட ஒருசில குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்க்கடி தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சுகாதார மையம் ஒன்றில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக ராஜ்குமார் என்பவர் வரிசையில் நின்று உள்ளார். அவருக்கு சுகாதார அதிகாரிகள் தடுப்பூசி போட்ட பின்னரே அது கொரோனா தடுப்பூசி அல்ல என்றும் வெறிநாய் கடிக்கான தடுப்பூசி என்றும் கூறியுள்ளனர். இதனை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்து இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்டவரை மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் .

 

Tags :

Share via