ராஜஸ்தானில் 4 புதிய மருத்துவ  கல்லூரிக்கு பிரதமர் மோடி அடிக்கல்

by Editor / 30-09-2021 06:39:17pm
ராஜஸ்தானில் 4 புதிய மருத்துவ  கல்லூரிக்கு பிரதமர் மோடி அடிக்கல்

 


ராஜஸ்தான் மாநிலத்தில் 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு பிரதமர் மோடி  காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கர் மற்றும் தவுசா ஆகிய 4 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது.


அதன்படி ராஜஸ்தானில் 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
ஜெய்ப்பூரில் உள்ள சீதாபுராவில் ரசாயன தொழில்நுட்ப நிறுவனத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


இந்தியாவும் தனது வலிமையையும் தற்சார்பையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். நாட்டின் மருத்துவத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு புதிய நலவாழ்வுக் கொள்கையை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.


ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தில் இணையம் மூலம் நல்ல மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருந்தகங்களை அறிந்துகொள்ள முடிவதுடன், நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.நாட்டில் 88 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதையும் பிரதமர் மோடி சுட்டிக் காட்டி பேசினார்.இந்த நிகழ்ச்சியில், காணொலியின்போது புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய சுருக்கமான வீடியோ விளக்கமும் காட்டப்பட்டது.

 

Tags :

Share via