ஜம்முவில் ஏழுமலையான்  கோவில் கட்ட ரூ.17.40 கோடி ஒதுக்கீடு

by Editor / 09-10-2021 05:25:18pm
ஜம்முவில் ஏழுமலையான்  கோவில் கட்ட ரூ.17.40 கோடி ஒதுக்கீடு

திருப்பதி ஏழுமலையான் கோவில் புதிய அறங்காவலர் குழுவின் முதல் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் காஷ்மீரில் உள்ள ஜம்முவில் ரூ.17.40 கோடி செலவில் புதிதாக ஸ்ரீவெங்கடேஸ்வரா கோவில் கட்டுவதற்கான ஒப்பந்த அனுமதி அளிக்கப்பட்டது.
சென்னை, பெங்களூரு, மும்பையில் உள்ள தகவல் மையங்கள் மற்றும் கோவில்களில் உள்ளூர் ஆலோசனை குழு தலைவர்களை நியமிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.


அதன்படி சென்னைக்கு ஏ.ஜே.சேகர், பெங்களூருக்கு ரமேஷ், மும்பைக்கு அமோல்காலே நியமிக்கப்பட்டுள்ளனர். அலிபிரி நடைபாதையை ரூ.7.50 கோடியில் அழகுபடுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கான ஆரோக்கிய நிதியை உருவாக்க முடிவு செய்துள்ளது.கடப்பா மாவட்டம் ராயச்சோட்டியில் ரூ.2.21 கோடி செலவில் திருமண மண்டபம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.


திருமலை, திருப்பதி தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க திருமலை, திருப்பதி கார்ப்பரே‌ஷனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories