26-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் -  தமிழக அரசு அறிவிப்பு

by Editor / 24-04-2021 06:35:26pm
26-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் -  தமிழக அரசு அறிவிப்பு

 

தமிழகத்தில் கொரோனா இரண்டவது அலை வேகமாக பரவி வருவதால் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. தொற்று பரவல் தீவிரம் காரணமாக தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க  உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை  தமிழக அரசு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வருகிற 26ம் தேதி (திங்கட்கிழமை) முதல் கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகள்:
முழு விபரம் வருமாறு :
திரையரங்குகள், உடற்பயிற்சிக்கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதி இல்லை.
பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை.
சென்னை உள்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி.
அனைத்து வழிபாட்டு தளங்களிலும், வழிபட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம்.
உணவகங்கள் மற்றும் டீ கடையில் பார்சல் மட்டுமே அனுமதி.வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் விமான பயணிகள் மற்றும் கப்பல் பயணிகள் இ-பாஸ் காட்ட வேண்டும்.
தனியார் அரசு பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை.
இறுதி ஊர்வலங்களில் பங்கேற்க அளிக்கப்பட்ட அனுமதி 50 லிருந்து 25ஆக குறைப்பு.
திருமணம் மற்றும் திருமண சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 நபர்களாக இருந்த அனுமதி 50ஆக குறைப்பு.
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு.

 

Tags :

Share via