சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100 ஐ கடந்து விற்பனை

by Editor / 25-10-2021 07:43:06pm
சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100 ஐ கடந்து விற்பனை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் விலை உயர்ந்து,பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது. இதனையடுத்து,தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில்,சென்னையில் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.100.25 க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல,பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.104.22 க்கு விற்பனை செய்யப்படுகிறது.பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும்,டீசல் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து வாகனங்களின் வாடகை கட்டணம் உயர்ந்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

 

Tags :

Share via