956 பேர் மீது 99 வழக்கு...

by Editor / 03-11-2021 01:17:46pm
956 பேர் மீது 99 வழக்கு...

 


முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையின்போது விதிமீறலில் ஈடுபட்ட 956 பேர் மீது வழக்குகள்
மறைந்த சுதந்திர போராட்ட வீரர், முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை கடந்த அக்டோபர் 30-ம் தேதி நினைவு கூறப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் 114வது ஜெயந்தி விழா மற்றும் 59 ஆவது குருபூஜை விழா அக்டோபர் 30-ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இங்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அ.தி.மு.க சார்
 
பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி.உதயகுமார், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு அஞ்சலி செலுத்தினர். மேலும் பாஜக சார்பில் அண்ணாமலை, எச் ராஜா, ஆர்கே சுரேஷ் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

ஆயிரக்கணக்கான மக்களுக்கு தேவர் நினைவிடத்துக்கு வந்த அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பாதுகாப்பு பணிக்காக வந்த காவல்துறை வாகனம் மற்றும் அரசு அதிகாரி வாகனத்தின் மீது ஏறி நின்று இளைஞர்கள் குத்தாட்டம் போட்டனர் .அதில் ஒருவர் அரசு வானத்தை வழிமறித்து காலை வைத்து ஆடும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதனையடுத்து, கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டும், காவல்துறையினர் கேமராக்களில் படம்பிடித்த காட்சிகளைக்கொண்டும்,ராமநாதபுரம் மாவட்டம்,கமுதியை அடுத்த பசும்பொன்னில், கடந்த அக் 28,29,30 ஆகிய நாட்களில் நடந்த முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக  வாகனங்களை இயக்கிய 956 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை  5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, தேவர் ஜெயந்தி விழாவின் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு விதிமுறை விதி மீறலில் ஈடுபட்ட 956 பேர் மீது 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், அபிராமம் காவல் நிலையத்தில் மட்டும் 20 வழக்குகளில்  22 பேரும் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில்  9 வழக்குகள் 768 பேரும் உள்ளனர்.
 
மேலும், 58 இருசக்கர வாகனங்களும்  39 நான்கு சக்கர வாகனங்களும்  சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில், 14 இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் 2 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட தகவல் மாவட்ட  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via