டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த தமிழகம், கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைவு...

by Editor / 03-11-2021 11:07:04pm
டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த தமிழகம், கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைவு...

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் சூழலில், தற்பொழுது டெங்கு பாதிப்பு புதிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பலர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வழக்கத்தை விட டெல்லியில் இந்தாண்டு 6 பேர் கொசு மூலம் பரவும் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் எடுத்து வருகின்றன

ஆனால் கடந்த மாதம் வரை 15 மாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குளிர்காலம் தற்போதுதான் தொடங்கியுள்ள நிலையில் இனி வரக்கூடிய நாட்களில் பாதிப்பின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 இந்தநிலையில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக பாதிப்பு அதிகம் உள்ள 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உயர்மட்ட நிபுணர் குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

குறிப்பாக தமிழகம், கேரளா, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட்  ஆகிய மாநிலங்களுக்கு  மத்திய குழுக்கள் விரைந்துள்ளன. இந்த குழுவினர் அங்குள்ள பொது சுகாதார அமைப்புடன் இணைந்து செயல்பட்டு டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

 

Tags :

Share via