இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு

by Editor / 15-11-2021 03:46:07pm
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 11,926 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 49 ஆயிரத்து 785 ஆக உயர்ந்தது.

இந்தியாவில் புதிதாக 10,229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
 
இதில் அதிகபட்சமாக நேற்று கேரளாவில் 5,848 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் மொத்த பாதிப்பு 3 கோடியே 44 லட்சத்து 47 ஆயிரத்து 536 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 65 பேர் உள்பட நேற்று நாடு முழுவதும் 125 பேர் இறந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஒரு நாள் பலி எண்ணிக்கை 400, 500 வரை இருந்து வந்தது. இந்நிலையில் பல மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் பலி எண்ணிக்கை 125 ஆக குறைந்திருப்பது கொரோனா 2-ம் அலை முடிவுக்கு வருவதை காட்டுவதாக கருதப்படுகிறது.

நாட்டில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 4,63,655 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 11,926 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 49 ஆயிரத்து 785 ஆக உயர்ந்தது.

தற்போது 1,34,096 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று 30,20,119 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 112 கோடியே 34 லட்சத்தை கடந்துள்ளது.

இதற்கிடையே நேற்று 9,15,198 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 62.46 கோடியாக உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via