நவம்பர் 25 முதல் ஐந்து ரயில்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள்

by Editor / 19-11-2021 07:21:58pm
நவம்பர் 25 முதல் ஐந்து ரயில்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள்

தென்னக ரயில்வே இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:வைகை பல்லவன் பாலருவி அந்தியோதயா மற்றும் புனலூர் விரைவு ரயில்களில் நவம்பர் 25 முதல் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன. வண்டி எண் 12635/12636   மதுரை - சென்னை - 
மதுரை வைகை விரைவு ரயில் மற்றும் வண்டி எண் 02606/02605 காரைக்குடி - சென்னை - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் ஆகியவற்றில் 3 முன் பதிவில்லாத ரயில் பெட்டிகளும், வண்டி எண் 16191/16192 தாம்பரம் - நாகர்கோயில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயிலில் 6 முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளும், வண்டி எண் 16791/16792 திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி விரைவு ரயில்களில் 4 முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளும் மற்றும் வண்டி எண் 16729/16730 மதுரை - புனலூர் - மதுரை ரயில்களில் 4 முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளும்  நவம்பர் 25 முதல்  இணைக்கப்படுகின்றன.

 

Tags :

Share via