செய்திகள் சில வரிகளில்...

by Editor / 21-11-2021 06:34:00pm
செய்திகள் சில வரிகளில்...

தமிழகத்தில் நவ.24,25ஆம் தேதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் மழையின் தீவிரம் குறைந்து அதற்கு பிறகு மீண்டும் வலுப்பெறும்.


இரவில் ஆடு திருடர்களை விரட்டி சென்ற போது கொலை செய்யப்பட்டுள்ளார் - திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.மேலும் 4 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.திருடர்களை 2 காவலர்கள் துரத்தி சென்றதில், ஒருவர் வழிமாறி சென்றுள்ளார்.மற்றொரு காவலர் வருவதற்குள் எஸ்.ஐ. பூமிநாதனை திருடர்கள் கொலை செய்துள்ளனர்.விசாரணை நடைபெற்று வருகிறது - விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


உதவி ஆய்வாளர் கொலை தொடர்பாக  குற்றவாளிகளை தேடி சிவகங்கை மற்றும் புதுக்கோட்டைக்கு தனிப்படை போலீசார்விரைந்துள்ளனர்.ஆடு திருடர்கள் பட்டியலில் இருந்த 2 நபர்களின் தொலைபேசி எண்கள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததால் காவல்துறையினருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மேலும் கொலை செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் 6 பேரை மடக்கி பிடித்து வைத்துள்ளதாக சக காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார் என்றும் சக காவலர்கள் வருவதற்குள் பூமிநாதனை ஆடு திருட்டு கும்பல் கொலை செய்துவிட்டு தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு :
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை,  திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.


வேளாண் சட்டங்கள் ரத்து - தீர்மானம் :
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மசோதா தாக்கல் செய்ய திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்,15 மாதங்களுக்கு மேலாக மவுனம் சாதித்த பிரதமருக்கு விவசாயிகளின் பலத்தை உணர்த்திய விவசாயிகளுக்கு பாராட்டு - தீர்மானம்.

மாறாக சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடப்பட்டிருக்கிறது; இது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்.

தேர்தல் நேரத்தில் சட்டத்தை வாபஸ் பெறுவதாகக் கூறிவிட்டு, பிறகு விவசாயிகளை ஏமாற்றக்கூடாது" -பிரியங்கா காந்தி பேட்டி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பொறையாரில் குடும்பத்தகராறு காரணமாக தந்தை பாலுவை (65) கட்டையால் அடித்துக்கொன்ற மகன் காளிமுத்து (28) கைது.


திருட்டுக்கும்பலால் கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் உடல், 30 குண்டுகள் முழங்க காவல் துறையின் மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது..

புதிய தலைமை நீதிபதி சென்னை வருகை :
சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி சென்னை வந்தடைந்தார்
சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை தலைமை பொறுப்பு நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.


சென்னை, ரிப்பன் மாளிகையில் மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழு மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை,* சென்னை மாநகராட்சியில் வெள்ளை பாதிப்பு குறித்து வைக்கப்பட்டு உள்ள புகைப்படங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.


 

செய்திகள் சில வரிகளில்...
 

Tags :

Share via