சின்ன சின்ன செய்திகள்..

by Editor / 23-11-2021 05:54:45pm
சின்ன சின்ன செய்திகள்..

புதுச்சேரியில் வெள்ள பாதிப்பு குறித்து ஒன்றிய குழு ஆய்வு
புதுச்சேரி: மணவேளி தொகுதியில் குடுயிருப்புகள் புகுந்த வெள்ள பாதிப்பு குறித்து ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 4 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொள்கிறது.


 சென்னையில் காப்பகத்தில் இருந்த 3 சிறுவர்களை காணவில்லை: போலீசில் புகார்.
சென்னை வியாசர்பாடியிலுள்ள காப்பகத்தில் இருந்த 3 சிறுவர்களை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கிறது டாடா குழுமம்.


தமிழ்நாட்டில் ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. நெல்லையில் 4 ஜிகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அலகை டாடா குழுமம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு.
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவ.24, 25,26 மூன்று நாட்கள் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.


 தனியார் பேருந்து மோதி பெண் பலி.
சென்னை-வேளச்சேரி 100 அடி சாலையில் மிதிவண்டியில் சென்ற சங்கீதா என்பவர் மீது தனியார் பேருந்து மோதி உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநர் புஷ்பராஜ் தப்பியோடிய நிலையில் சிசிடிவி காட்சியை கைப்பற்றி கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூல், கையேடு மட்டுமல்ல; இந்தியாவுக்கு கலங்கரை விளக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூல், கையேடு மட்டுமல்ல; இந்தியாவுக்கு கலங்கரை விளக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கலைஞரின் மனசாட்சியாக விளங்கிய முரசொலி மாறன், ஒன்றிய அமைச்சராக நாட்டுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். கூர்ந்த மதியாளரான முரசொலி மாறனின் நினைவைப் போற்றி வணங்குகிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 பாலியல் தொல்லை புகார் எண்கள் குறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்.
பாலியல் தொல்லைகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில், அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் வகையில் தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். பாலியல் தொல்லை புகார் எண்கள் குறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


 பல்கேரியாவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி.
பல்கேரியா நாட்டில் விபத்தில் சிக்கிய பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 12 குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர். பேருந்து விபத்தில் தீக்காயம் அடைந்த 7 பேர் தலைநகர் சோபியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via