தூத்துக்குடி மழை வெள்ளப்பகுதிகளை பார்வையிட நாளை முதல்வர் வருகை

by Editor / 01-12-2021 02:27:44pm
 தூத்துக்குடி மழை வெள்ளப்பகுதிகளை பார்வையிட நாளை முதல்வர் வருகை

தூத்துக்குடி மாவட்டம் கனமழையால் அதிக துயரத்தைச் சந்தித்துள்ளது. அங்கு கடந்த 25ஆம் தேதி முதல் கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. தூத்துக்குடி மாநகராட்சியால் விரிவாக்கப்பட்ட பகுதிகள் எல்லாம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. அங்கு நாட்கள்  கடந்தும் சில பகுதிகளில் வெள்ளம் வடியாததால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் படகுகள் மற்றும் அரசு வாகனங்கள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். கடலோர மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டன,இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் முதல்வரின் உத்தரவுப்படி மழைவெள்ளம் பாதிக்கபட்ட பகுதிகளில் அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாமிட்டு வெள்ளசேதபாதிப்புக்களைஆய்வு மேற்கொண்டனர்,தூத்துக்குடியில்  பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி,அமைச்சர்கள் அனிதாராதாகிருஷ்ணன்,கீதா ஜீவன்  உள்ளிட்டோர் அனைத்து பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அதிகம் பாதிப்புள்ள பகுதிகளில் வசித்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டநிலையில் மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் மக்கள்  இயல்பு வாழ்க்கைக்கு  தற்போது திரும்பி வருகின்றனர்.இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (1.12.2021)  விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தின் மழை வெள்ளதேங்களை பார்வையிட தமிழக முதல்வர் நாளை வருகிறார். 
 

 

Tags :

Share via