உலகின் டாப் 10 கொலைகார நாடுகள் தெரியுமா..?

by Admin / 16-12-2021 04:14:56pm
உலகின் டாப் 10 கொலைகார நாடுகள்  தெரியுமா..?

2021ல் அதிக கொலைகள் நடந்த டாப் 10 நாடுகள் பற்றிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
 பிரபல ஆய்வு நிறுவனமான ஸ்டாடிஸ்டா, இந்த 2021-ஆம் ஆண்டில் எந்த நாட்டில் அதிக கொலைகள் நடந்துள்ளது என்பது தொடர்பான ஆய்வு விவரத்தை வெளியிட்டுள்ளது. 

இந்த ஆய்வின் முடிவின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதம் வரை அதிக கொலைகள் நடந்த நாடுகளின் பட்டியலை எண்ணிக்கை அடிப்படையில் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆய்வும் ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் கொலை செய்யப்பட்டு இறக்கின்றனர் என்பதன் அடிப்படையிலே வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முதல் இடத்தில்  ஆப்பிரிக்காவில் உள்ள எல் சால்வடார் நாடு உள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு அதிக கொலைகள் நடந்த நாடுகளின் பட்டியலில் இந்த நாடு முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு ஒரு லட்சம் பேரில் சுமார் 61.7 பேர் கொலை செய்யப்படுவதாக ஆய்வில் தெரியவந்தது.

உலகில் அதிக கொலைகள் நடக்கும் நாடுகளின் டாப் 10 பட்டியல் (100,000 பேரில்)எல் சால்வடார் (82.84), ஹண்டுராஸ் (56.52), வெனிசுலா (56.33), யுனைடெட் ஸ்டேட் விர்ஜின் ஐலேண்ட் (49.26), ஜமைக்கா (47.01), லெஸிதோ (41.25) பெலிஸ் (37.6), செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் (36.46), செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் தீவுகள் (34.23), தென்ஆப்ரிக்கா (33.97)

 

Tags :

Share via