நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார்

by Editor / 03-05-2021 05:37:22pm
 நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார்

 

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்செவ்வாய்க் கிழமைகாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சராக எம்.எல். ஏ.க்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறார்கள்.அதன் பிறகு மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகை சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடித்தை வழங்குகிறார்.
அப்போது எந்த தேதியில் பதவி ஏற்பது என்ற விவரம் வெளியிடப்படும். வருகிற 7-ந் தேதி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் .கிண்டி கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என தெரிகிறது.

 

Tags :

Share via