பொங்கல் பண்டிகையையொட்டி16,768 சிறப்பு பேருந்துகள்- அமைச்சர் ராஜ கண்ணப்பன்

by Editor / 20-12-2021 06:20:14pm
பொங்கல் பண்டிகையையொட்டி16,768 சிறப்பு பேருந்துகள்- அமைச்சர் ராஜ கண்ணப்பன்

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என  போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்:
பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் ஜனவரி 11ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரை சென்னையிலிருந்து மொத்தம் 10,300 பேருந்துகள் இயக்கப்படும். அதாவது மூன்று நாட்களிலும் சென்னையிலிருந்து ஒரு நாளைக்கு 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படும். சென்னை தவிர பிற ஊர்களில் இருந்து ஜனவரி 11ஆம் முதல் 13ஆம் வரை 6,468 பேருந்துகள் இயக்கப்படும்.

அதேபோல், பொங்கல் முடிந்து சொந்த ஊரிலிருந்து பணியாற்றும்  பகுதிகளுக்கு திரும்ப ஏதுவாக மொத்தம் 16,709 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். டெண்டர் பெறப்பட்ட மோட்டல்களில்தான் அரசு பேருந்துகளை நிறுத்தமுடியும். அதேசமயம் சாலையோர மோட்டல்களில் உணவின் தரம் குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக உணவின் தரம், சுகாதாரப் பிரச்னைகள் குறித்து புகார்கள் உறுதி செய்யப்பட்டால் டெண்டர் ரத்துசெய்யப்படும்’’ என்று தெரிவித்தார். மாணவர்கள் படிக்கட்டுக்களில் ஆபத்தான முறையில் பயணிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via