அரசு பேரூந்துக்களில் இணையத்தளம் பொங்கல் முன்பதிவு செய்யலாம்

by Editor / 20-12-2021 06:26:16pm
அரசு பேரூந்துக்களில் இணையத்தளம்  பொங்கல் முன்பதிவு செய்யலாம்

சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 பொங்கல் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகளும்  இயக்கப்படும்- போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பேருந்துகளுக்கு tnstc.in, redbus.in, paytm.com, busindia.com,  tnstc official app இணையதளங்கள் மூலமாக  முன்பதிவு செய்துகொள்ளலாம்- போக்குவரத்துத் துறை.

பொங்கல் நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002  ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்-என போக்குவரத்துத் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via